மேல்மருவத்தூர் அருகே கிளியாற்றில் செல்பி எடுத்த வாலிபர் பலி


மேல்மருவத்தூர் அருகே கிளியாற்றில் செல்பி எடுத்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2021 7:42 PM IST (Updated: 29 Nov 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் அருகே கிளியாற்றில் செல்பி எடுத்த வாலிபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 37). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று மனைவி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கீழாமூர் பகுதியில் செல்லும் கிளியாற்றில் வெள்ளத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுத்தார். எதிர்பாராதவிதமாக தவறி ஆற்றில் விழுந்தார். இதில் மனைவியின் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த கிராம மக்கள் தீனயாளனை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீனதயாளன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story