ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 29 Nov 2021 7:42 PM IST (Updated: 29 Nov 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி கமர்சியல் சாலையில் ஒரு தனியார் ஓட்டலில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கப்புகளை பயன்படுத்துவதாக கலெக்டருக்கு புகார் வந்தது. 

இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜ் உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் தடை செய்த கப்புகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. தொடர்ந்து 2½ கிலோ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.


Next Story