சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பலத்த மழையுடன் காற்று வீசியதால் குன்னூர்-கோத்தகிரி சாலை உபாசி அருகே மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் சாலையோரம் இருந்த மின்கம்பி மீது கிளை விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் குன்னூரில் இருந்து கோத்தகிரி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குன்னூரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடியிருப்புகள் இருளில் மூழ்கியது. இதேபோன்று குன்னூர்-ஊட்டி சாலை காணிக்கராஜ் நகர் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story