ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்


ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
x
தினத்தந்தி 29 Nov 2021 8:29 PM IST (Updated: 29 Nov 2021 8:29 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அனு (வயது26). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அனு கோவித்துக் கொண்டு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு பரும்பூரிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் அனு கடந்த சில நாட்களாக மனமுைடந்த நிலையில் இருந்துள்ளார்.  
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில்  சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story