தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்


தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 29 Nov 2021 9:46 PM IST (Updated: 29 Nov 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சி பட்டியல் அணி மற்றும் வணிகர் பிரிவு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் பால்ராஜ் (தெற்கு), ராமமூர்த்தி (வடக்கு) ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போன்று மாநில அரசும் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பிரபு, செல்வராஜ், சிவமுருகன் ஆதித்தன், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்தி நாராயணன், வணிகர்பிரிவு மாநில செயலாளர் சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Next Story