மோட்டார் சைக்கிள் விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் சாவு
திருத்தணியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் ஓட்டல் நடந்தி வந்தார். 3 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் வேலையை முடிந்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். திருத்தணியை அடுத்த முருகம்பட்டு அருகே வரும்போது அந்த கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கன்னியப்பன் என்பவரது மோட்டார் சைக்கிளுடன் நித்தியானந்தத்தின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
சிகிச்சை
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனளிக்காமல் ஓட்டல் முதலாளி நித்தியானந்தம் அன்றே இறந்து போனார். படுகாயமடைந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த கன்னியப்பன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Related Tags :
Next Story