பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:09 PM IST (Updated: 29 Nov 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்
திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கடந்த வாரம் மதுரை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து டிரைவர் பஸ் ஓட்டிச்சென்றபோது, சிலர் தாக்கியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயல் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் மோட்டார் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி, பனியன் சங்க செயலாளர் ஆறுமுகம், மோட்டார் சங்க செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story