வறண்டு கிடக்கும் ஆலமரத்துக்குளம்


வறண்டு கிடக்கும் ஆலமரத்துக்குளம்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:17 PM IST (Updated: 29 Nov 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் பலத்த மழை பெய்த போதிலும் ஆலமரத்துக்குளம் வறண்டு கிடக்கிறது.

கம்பம்:

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால், ஓடைகள் வழியாக கம்பம்-ஏகலூத்து சாலையில் உள்ள ஆலமரத்துக்குளத்துக்கு தண்ணீர் வந்தடைகிறது. அந்த குளம் நிரம்பி, சிக்காலி குளம் மற்றும் கம்பம் நகர் வழியாக வீரப்பநாயக்கன் குளத்தை தண்ணீர் வந்தடைவது வழக்கம்.

 நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் தண்ணீர் வழிந்து செல்லும் ஓடை நெடுகிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன.

இந்தநிலையில் தண்ணீர் வரும் ஓடைகளை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சில இடங்களில் ஓடைகள் இருந்த சுவடே இல்லாமல் போய் விட்டது. கடந்த சில வாரங்களாக, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

 இதனால் ஓடைகள் வழியாக தண்ணீர் வராமல், விளைநிலங்களுக்குள் புகுந்து வீணாகி வருகிறது. இதனால் கம்பம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த போதிலும் ஆலமரத்துக்குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. 

இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story