ஸ்டூடியோ உரிமையாளர் கைது


ஸ்டூடியோ உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2021 10:27 PM IST (Updated: 29 Nov 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்டூடியோ உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 33). இவர், அதே ஊரில் ஸ்டூடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு, பெண் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வந்தார். அப்போது அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் அலறினார். 

இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை திருஞானம் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருஞானத்தை கைது செய்தனர்.

Next Story