ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்த நடிகையிடம் ரூ.3 லட்சம் அபேஸ்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 29 Nov 2021 5:03 PM GMT (Updated: 29 Nov 2021 5:03 PM GMT)

ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்த நடிகையிடம் ரூ.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.

மும்பை, 
ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்த நடிகையிடம் ரூ.3 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது.
ஆன்லைன் மது
பொதுவாக ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆனால் இது தெரியாமல் பலர் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்து பணத்தை இழந்து வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன் தாதர் பகுதியை சேர்ந்த 74 வயது இந்தி நடிகை ஒருவரும் ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்து, மோசடி கும்பலின் வலையில் சிக்கி உள்ளார்.
நடிகை தனது உறவினருக்கு விலை உயர்ந்த விஸ்கி பாட்டீலை பரிசாக கொடுக்க விரும்பினார். எனவே அவர் சம்பவத்தன்று ஆன்லைனில் விஸ்கி வாங்க முடிவு செய்தார். அவர் இணையதளத்தில் இருந்து மதுபான கடை ஒன்றின் செல்போன் எண்ணை எடுத்தார். பின்னர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு விஸ்கி ஆர்டர் செய்தார். மேலும் அதற்குரிய பணத்தையும் ஆன்லைனில் அனுப்பினார்.
ரூ.3 லட்சம் அபேஸ்
ஆனால் நடிகைக்கு விஸ்கி டெலிவிரி செய்யப்படவில்லை. எனவே அவர் மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பிகேட்டார். எதிர்முனையில் பேசிய நபர் பணத்தை திருப்பி தருவதாக கூறி, நடிகையின் ஏ.டி.எம். கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரம், ஓ.டி.பி. எண்ணை வாங்கினார். பின்னர் அதை பயன்படுத்தி நடிகையின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.3 லட்சத்தை அபேஸ் செய்தார். 
இது குறித்து நடிகை சிவாஜி பார்க் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகையிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடிவருகின்றனர்.

Next Story