மேல்மலையனூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் திடீர் சாலைமறியல் துணை தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார்

மேல்மலையனூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் திடீர் சாலைமறியல் துணை தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார்
x
தினத்தந்தி 29 Nov 2021 5:20 PM GMT (Updated: 29 Nov 2021 5:20 PM GMT)

மேல்மலையனூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினர் திடீர் சாலைமறியல் துணை தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார்

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே கன்னலம் ஊராட்சியில் கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில் சர்ச்சை எழுந்ததை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புச்செல்வன், தேவராஜன் ஆகியோர் முன்னிலையில் துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள் சந்திரசேகர், லட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். 

வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற இந்த தேர்தலில் லட்சுமி துணை தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சந்திரசேகரன் மற்றும் இவரது ஆதரவாளர்கள் தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story