தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 29 Nov 2021 11:12 PM IST (Updated: 29 Nov 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பழுதடைந்த மின்சாதன பெட்டி 
புதுக்கோட்டை மாவட்டம், வாகவாசலில் உள்ள மின்கம்பங்களில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகளை இயக்கும் வகையில்  ஒரு மின்கம்பத்தில் மின் சாதன பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாதன பெட்டி பழுதடைந்து பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்வதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வாகவாசல், புதுக்கோட்டை. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
கரூர் மாவட்டம் புகழூர் ஓம் சக்தி நகர்   நுழைவு வாயிலில் சாலையோரத்தில் இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு எற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புகழூர், கரூர். 

சேற்றால் பள்ளி மாணவர்கள் அவதி 
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி முன்பும், பள்ளி கழிவறைக்கு செல்லும் வழியிலும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜன், கோட்டையூர், புதுக்கோட்டை. 

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவில்  கழிவுநீர் வாய்க்கால் சரிவர சுத்தம் செய்யப்படாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கீதா, புஞ்சை தோட்டக்குறிச்சி, கரூர்.

அசுத்தமான சாலை 
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கிழுமத்தூர் கிராமத்தில் இருந்து ஓலைப்பாடி செல்லும் சாலை குப்பை கிடங்கு போலவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் காட்சி அளிக்கிறது. மேலும் இப்பாதை கால்பங்கு மட்டும் தார் சாலையாகவும் மீதம் மண் சாலையாகவும் உள்ளது. இதனால் மழைபெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த சாலை வழியாகத்தான் குடிநீர் தொட்டிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் செல்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 பொதுமக்கள், கிழுமத்தூர், பெரம்பலூர். 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், முதலைப்பட்டி ஊராட்சி கீழமேடு பாரதி நகரில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால் மழை தண்ணீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சில நாட்களாக அப்படியே உள்ளது. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 பொதுமக்கள், கீழமேடு, கரூர். 

சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து 
அரியலூர் நகரில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வீடுகளில் இருந்து அவிழ்த்து விடப்படும் கறவைமாடுகளால் பல விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். வீடுகளில் வளர்க்கவேண்டிய மாடுகளை சாலைகளில் அவிழ்த்துவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை மாடு வளர்ப்பவர்கள் பொருட்படுத்தவில்லை. தினசரி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பஸ் நிலையம், மார்க்கெட் தெரு ,பெரிய கடை தெரு, காந்தி மார்க்கெட், செந்துறை, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், திருச்சி செல்லும் சாலைகளிலும் சுற்றித்திரிகின்றன. மாடுகள் திடீரென மிரண்டு  இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விழுவதால் பலர் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என   கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரியலூர். 

கீழே விழும் நிலையில் உள்ள அரச மரம் 
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனி அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகில் பெரிய அரச மரம் உள்ளது. இதன் கிளைகள் வளர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் இதன் வழியாக தினமும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் சென்று வருகின்றனர். தற்போது மழை காலம் என்பதால் கிளை முறிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இதற்குரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுமக்கள், அண்ணாநகர் நெய்தலூர், கரூர். 

அடிப்படை வசதிகள் வேண்டும் 
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றிய அலுவலகம்  அருகில் உள்ள கந்தசாமி உடையார் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாகவும் உள்ளது.  மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.  மேலும் காவிரி குடிநீர் குழாய் இருந்தும் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கந்தசாமி உடையார்நகர், திருச்சி. 

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி பாலக்கரை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை கூட்டம் கூட்டமாக சாலையில் சண்டையிட்டுக்கொள்வதினாலும், திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் நடந்து செல்லும் பெண்களையும், குழந்தைகளையும் நாய்கள் கடிக்க வருவதினால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரஞ்சனி, பாலக்கரை, திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம், தொட்டியம், சேலம் மெயின்ரோட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை நாய்கள் துரத்துவதினால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தொட்டியம், திருச்சி. 

எரியாத உயர் கோபுர மின் விளக்கு 
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் மேம்பாலத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து இருப்பதினால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேம். 
பொதுமக்கள், திருச்சி. 

கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு 
திருச்சி மாநகராட்சி  23-வது வார்டு  காஜாபேட்டை மெயின்ரோட்டில் பூந்தோட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கிளமெண்ட், காஜாபேட்டை, திருச்சி.

மின் மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் குடிநீர் 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் கொப்பம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகளில் சிலர் மின்மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சுவதினால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  வடக்கு வீதி கொப்பம்பட்டி, திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள கொண்டம் வாரி வளைவு பாலம் அருகில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சாலை பழுதாகி  குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் மோட்டார் சைக்கிளை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பள்ளம் இன்னும் பெரியதாக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கொண்டம்வாரி, திருச்சி. 


Next Story