மழைக்காலம் முடியும்வரை தொய்வின்றி பணியாற்ற வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் உத்தரவு


மழைக்காலம் முடியும்வரை தொய்வின்றி பணியாற்ற வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2021 11:23 PM IST (Updated: 29 Nov 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மழைக்காலம் முடியும் வரை அரசு அலுவலர்கள் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

மழைக்காலம் முடியும் வரை அரசு அலுவலர்கள் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவில் பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து நீர்நிலைகள் நிரம்பி ஆற்றில் தண்ணீர் செல்வது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் வீடுகள் இடிந்து விழுந்ததினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தொய்வின்றி பணியாற்ற வேண்டும்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சம்பத் பேசுகையில், மழை வெள்ளத்தால் ஏற்படும் சேதங்கள் குறித்து உடனுக்குடன் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிப்படைந்த பொதுமக்களுக்கு விரைவான முறையில் நிவாரணங்களை பெற்றுத்தர அரசு அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். மழைக்காலம் முடியும் வரை அனைத்து அலுவலர்களும் தங்கள் பணிகளை தொய்வின்றி மேற்கொண்டு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story