மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
அரக்கோணம்
நாகப்பட்டினம் மாவட்டம் ரத்தினமங்கலத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர், அரக்கோணத்தை அடுத்த அம்பிரிஷிபுரம் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று காலை குளிப்பதற்காக குளியல் அறையின் அருகில் சென்றபோது, அங்கிருந்த குழாய் மீது மின்வயர் அறுந்து கிடந்ததை பார்க்காமல் குழாயை தொட்டுள்ளார். அப்போது மாதவன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேேய பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மாதவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பினனர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story