மழையில் நடந்த இறுதிச்சடங்கு
இறந்தவர் உடலை வயல் வழியாக கொண்டு சென்ற கிராமத்தினர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே உள்ளது சின்ன ஆவரங்காடு கிராமம். இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு சுமார் 2கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்துககு கொண்டு செல்வார்கள். அந்த மயானத்துக்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாததால் அந்த வழியில் உள்ள வயல்வெளி வழியாகத்தான் உடலை தூக்கி செல்ல வேண்டி உள்ளது. கோடைக்காலத்தில் வயல் பகுதியில் சாகுபடி ஏதும் இருக்காது என்பதால், அச்சமயத்தில் எளிதாக உடலை கொண்டு சென்று விடுவார்கள். தற்போது மழைபெய்து அந்த பகுதியில் விவசாய பணி நடைபெறுவதால் வயல்வெளியில் பல்வேறு சிரமங்களை கடந்து கிராம மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நேற்று இந்த கிராமத்தில் இறந்த ஒருவரின் உடலை தூக்கிக் சென்ற கிராம மக்கள் போதிய பாதையில்லாததால் வயல்வெளிகளின் நடுவிலும், வரப்பு பகுதியில் சுமந்து சென்றனர். கொட்டும் மழையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் இல்லை. தற்போது மழைக்காலங்களில் இந்த வழியாக உள்ள வயல்வெளி பகுதியில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story