மறுகால் பாய்ந்த கண்மாய்கள்
15 ஆண்டுகளுக்கு பிறகு மறுகால் பாய்ந்த கண்மாய்கள்
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டிற்கு பிறகு தற்போது சுமார் 15 ஆண்டுகள் கழித்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. இதுதவிர சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாலாறு, சருகணி, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து தடுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சுட்டிநெல்லிப்பட்டி வழியாக புதுவயல் செல்லும் சாலையின் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியினர் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து நேற்று சாக்கோட்டை யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உயர்மட்ட பாலம் அமைக்க அறிக்கை தயார் செய்து அரசிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story