சவுதி அரேபியாவில் இறந்த வாலிபர்
சவுதி அரேபியாவில் இறந்த பொன்னமராவதி வாலிபரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக பொன்னமராவதி அருகே மேலத்தானியம் பகுதியை சேர்ந்த இளஞ்சியம் மற்றும் அவரது உறவினர்கள் வந்திருந்தனர். அவர்கள் அளித்த மனுவில், இளஞ்சியத்தின் கணவர் ஆனந்தன் (வயது 37) சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு விபத்தில் கடந்த 7-ந் தேதி இறந்தார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இறந்து 20 நாட்களுக்கு மேல் ஆனதால் நாங்கள் துயரத்தில் இருக்கிறோம். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கவிதாராமு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story