மதுபானங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்தவரின் உடலை பாடையில் வைத்து கிராம மக்கள் சாலை மறியல்
ஓசூர் அருகே கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்தவரின் பிணத்தை பாடையில் வைத்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்தவரின் பிணத்தை பாடையில் வைத்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ஓசூர் அருகே ஓ.காரப்பள்ளி செந்தில் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகளை வாங்கி வந்து சிலர் விற்று வந்தனர். இதை வாங்கி குடித்த அதே பகுதியை சேர்ந்த பாபு (வயது 23) கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.
இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த அவருடைய உறவினர் சந்துரு (30) என்பவரும் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கர்நாடகத்தில் இருந்து மது பானங்களை வந்து வாங்கி வந்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று சந்துருவின் உடல் வைக்கப்பட்ட பாடையை, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் போலீசார் அங்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கர்நாடக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story