பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 12:53 AM IST (Updated: 30 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நல்லம்பள்ளியில் காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி:
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் தலைமை தாங்கினார். இதில் வட்டார தலைவர் காமராஜ், காங்கிரஸ் பிரிவு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் தங்கவேல், மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் மகளிர் அணி நிர்வாகிகள் வீரம்மாள், ரஞ்சிதம், கோமதி, சிந்து, முனியம்மாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் காளியப்பன், குப்புசாமி, சக்தி, மாதன் உள்பட பலர் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story