டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய கோரி தஞ்சையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
பணி நிரந்தரம் செய்ய கோரி தஞ்சையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை தற்காலிக பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடங்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தின் வருமானத்தில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடியை ஈட்டிக் கொடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள் 18 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணி செய்து வருகின்றார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சலுகைகள்
வார விடுமுறை, அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் நடைமுறை படுத்தப்படுவதை போல் பணிவரன் முறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் சேவையா முடித்து வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சம்மேளன துணை தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க துணைத்தலைவர் சுந்தரபாண்டியன், கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் செல்வம், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முடிவில் டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் செழியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story