ஆனைக்குட்டம் அணையில் அதிகாரி ஆய்வு
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணையில் அதிகாரி ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் மேற்பார்வையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை ஆனைக்குட்டம் அணைக்கு வந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனரும், மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலருமான காமராஜ் அணைப்பகுதியை ஆய்வு செய்தார்.அப்போது அவர் ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், என்ஜினீயர் ராஜா, சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story