தாயில்பட்டி பகுதியில் மழை
தாயில்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி, மண்குண்டம்பட்டி, மடத்துப்பட்டி, பேர் நாயக்கன்பட்டி, விஜயரங்காபுரம், கோமாளிபட்டி, சிப்பிபாறை, குகன்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் ஓடைகளில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிப்பிபாறை பெரிய கண்மாய், கொம்மங்கிபுரம் கண்மாயில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் நிலையில் உள்ளது. மழையினால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழையினால் பருத்தி, உளுந்து பயிர்கள் சேதமடைய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
Related Tags :
Next Story