வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு


வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 30 Nov 2021 1:38 AM IST (Updated: 30 Nov 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

வாய்க்காலில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திம்மூர்-அரியலூர் குறுக்கு சாலையில் உள்ள வாய்க்காலில் மூழ்கிய நிலையில் ஒரு முதியவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர், சில்லக்குடி ஊராட்சி மேத்தால் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 62) என்பது தெரியவந்தது. இவர் நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அதிக அளவில் தண்ணீர் சென்ற வாய்க்காலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் சூரியகலா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story