மின்சாரம் பாய்ந்து சினை மாடு மாவு
மின்சாரம் பாய்ந்து சினை மாடு செத்தது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த சினை மாடு ஒன்று நேற்று காலை திருச்சி- சிதம்பரம் சாலையில் மேய்ச்சலுக்கு சென்றது. சாலையோரத்தில் தெருவிளக்கு மின் கம்பத்தின் அருகில் இருந்த செடி, கொடிகளை பசுமாடு மேய்ந்தபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தின் கீழ்ப் புறத்தில் இருந்த மின் வயரில் பசு மாட்டின் உடல்பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. பின்னர் இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக தெரு விளக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, மாட்டின் உடல் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story