கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 30 Nov 2021 1:39 AM IST (Updated: 30 Nov 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்:
பெட்ரோல்-டீசல் விலை மீதான மாநில அரசின் வாட் வரியை குறைக்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து நேற்று மதியம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு குறைத்தது போல், பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story