மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி + "||" + Attempted burglary by breaking the lock of the house in broad daylight

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 33). இவர் தனது தாய் மருதாம்பாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை செல்லதுரை வேலைக்கு சென்றுவிட்டார். மருதாம்பாள் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும், வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் நகை, பணம் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லதுரை அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு
சிவகாசியில் பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
3. வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு
5. வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.