பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து தொடங்கியது
காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து தொடங்கியது.
எடப்பாடி
பூலாம்பட்டி
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் நீர்வழிப்பாதையான காவிரி ஆற்றில் படகு போக்குவரத்து உள்ளது.
கடந்த 3 வாரங்களாக வடகிழக்கு பருவமழையினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான உபரிநீரினால் பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் காவிரி ஆற்றை சுற்றி சாலை வழியாக சென்று வந்தனர்.
படகு போக்குவரத்து தொடங்கியது
தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் மட்டுமே தற்போது திறக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக ஆற்றில் நீர்வரத்து குறைந்து இருப்பதால் சேலம், ஈரோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு இடையேயான படகு போக்குவரத்து நேற்று தொடங்கியது.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story