கர்நாடகத்தில் 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிப்பு
கர்நாடகத்தில் 5 நகரசபைகள், 19 புரசபைகள் உள்பட 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
பெங்களூரு: கர்நாடகத்தில் 5 நகரசபைகள், 19 புரசபைகள் உள்பட 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
மக்கள் பிரதிநிதிகள்
கர்நாடகத்தில் பல்வேறு காரணங்களால் 57 கிராம பஞ்சாயத்துகள், 5 நகரசபைகள், 19 புரசபைகள், 34 பட்டண பஞ்சாயத்துகள் என 115 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்தது. அதாவது பெங்களூரு நகர மாவட்டம் எலகங்கா தாலுகாவில் 3 கிராம பஞ்சாயத்துகள், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் தொட்டபள்ளாபுரா தாலுகாவில் 2, தேவனஹள்ளியில் 2, ராமநகர் மாவட்டம் மாகடியில் 2, சிவமொக்கா மாவட்டம் சிவமொக்கா தாலுகாவில் 2, சிகாரிபுரா தாலுகாவில் 1, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹனூர் தாலுகாவில் ஒன்று, ஹாசன் மாவட்டம் ஹாசன் தாலுகாவில் 4, ஆலூரில் ஒன்று, அரிசிகெரேயில் ஒன்று, அரக்கல்கோடுவில் ஒன்று.
சென்னராயபட்டணாவில் ஒன்று, மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் ஒன்று, சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜம்புராவில் ஒன்று, மூடிகெரேயில் 2, பெலகாவி மாவட்டம் பெலகாவி தாலுகாவில் 2, அதானியில் ஒன்று, ராயபாகில் 3, ராமதுர்காவில் 3, தார்வார் மாவட்டம் தார்வார், நவலகுந்து, அன்னிக்கேரி, கல்கட்டகி தாலுகாக்களில் தலா ஒன்று, குந்துகோலில் ஒன்று, கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகாவில் ஒன்று, பீதர் மாவட்டம் ஹுலசூர் தாலுகாவில் 3 என மொத்தம் 44 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவடைகின்றன.
27-ந் தேதி தேர்தல்
அதே போல், கடந்த தேர்தலின்போது உறுப்பினர்கள் தேர்வாகாமல் இருந்தது, கோர்ட்டு வழக்குகளில் தேர்தல் நடைபெறாத காரணத்தால் பெங்களூரு புறநகர் நெலமங்களாவில் ஒரு கிராம பஞ்சாயத்து, துமகூரு மாவட்டம் குப்பி, திப்தூரில் தலா ஒன்று, சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, தரிகெரேயில் தலா ஒன்று, பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் ஒன்று, தாவணகெரே மாவட்டம் தாவணகெரே தாலுகாவில் ஒன்று.
விஜயநகர் மாவட்டத்தில் அகரிபொம்மனஹள்ளி தாலுகாவில் ஒன்று, விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகாவில் ஒன்று, ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்காவில் 3 என மொத்தம் 11 கிராம பஞ்சாயத்துகள் காலியாக உள்ளன. ஆகமொத்தம் 57 கிராம பஞ்சாயத்துகளுக்கு வருகிற டிசம்பர் 27-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை வாபஸ் பெற 15-ந் தேதி கடைசி நாள் ஆகும். 16-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. மனுக்களை வாபஸ் பெற 18-ந் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை 30-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
878 வார்டுகள்
இந்த 57 கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 878 வார்டுகள் உள்ளன. இது மட்டுமின்றி பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் காலியாக உள்ள 386 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அதே காலஅட்டவணையில் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறும் கிராம பஞ்சாயத்துகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற 8-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
5 நகரசபைகள்-19 புரசபைகள்
அதுபோல் கர்நாடகத்தில் 5 நகரசபைகள், 19 புரசபைகள், 34 பட்டண பஞ்சாயத்து என்று மொத்தம் 58 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது.
அதன்படி சிக்கமகளூரு மாவட்டம் சிக்கமகளூரு நகரசபை, துமகூரு மாவட்டம் சிரா நகரசபை, கதக் மாவட்டம் கதக்-பெடகேரி நகரசபை, விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே நகரசபை, பெலகாவி மாவட்டம் அதானி புரசபை, தார்வார் மாவட்டம் அன்னேகேரி புரசபை, ஹாவேரி மாவட்டம் பங்காபுரா புரசபை, பெங்களூரு நகர மாவட்டத்தில் ஹெப்பகோடி நகரசபை, ஜிகனி புரசபை, சந்தாபுரா புரசபை, ராமநகர் மாவட்டம் பிடதி புரசபை, சித்ரதுர்கா மாவட்டம் நாயக்கண ஹட்டி பட்டண பஞ்சாயத்து, தாவணகெரே மலேபென்னூர் புரசபை, தட்சிண கன்னடா மாவட்டத்தில் விட்லா பட்டண பஞ்சாயத்து, கோடிகார் பட்டண பஞ்சாயத்து, உடுப்பி மாவட்டம் காபு புரசபை.
பெலகாவி மாவட்டத்தில் ஹாரேகேரி புரசபை, முகலகோடா புரசபை, முனவள்ளி புரசபை, உகாரகுர்தா புரசபை, கங்கனவாடி பட்டண பஞ்சாயத்து, நாகனூர் பட்டண பஞ்சாயத்து, எக்சாம்ப பட்டண பஞ்சாயத்து, சென்னம்மா கித்தூர் பட்டண பஞ்சாயத்து, அரபாவி பட்டண பஞ்சாயத்து, ஐனாபுரா பட்டண பஞ்சாயத்து, சேடபாள பட்டண பஞ்சாயத்து, சிஞ்சிலி பட்டண பஞ்சாயத்து, போரகாம்ப பட்டண பஞ்சாயத்து, கல்லோலி பட்டண பஞ்சாயத்து, விஜயாப்புரா மாவட்டத்தில் நலதவாட பட்டண பஞ்சாயத்து, நிடகுந்தி பட்டண பஞ்சாயத்து, தேவரஹிப்பரகி பட்டண பஞ்சாயத்து, அலமேல பட்டண பஞ்சாயத்து, மணகுலி பட்டண பஞ்சாயத்து, கோல்ஹார பட்டண பஞ்சாயத்து.
நகர உள்ளாட்சி அமைப்புகள்
பாகல்கோட்டை மாவட்டத்தில் கமதகி, பெலகலி, அமினகட ஆகிய பட்டண பஞ்சாயத்துகள், உத்தர கன்னடா மாவட்டத்தில் ஜாளி பட்டண பஞ்சாயத்து, கொப்பல் மாவட்டத்தில் காரடகி புரசபை, தாவரகேரா, குகனூர், பாக்யநகர், கனககிரி ஆகிய பட்டண பஞ்சாயத்துகள், பல்லாரி மாவட்டத்தில் குருகுப்பா, குரகோடு புரசபைகள், விஜயநகர் மாவட்டத்தில் ஹகரிபொம்மனஹள்ளி புரசபை, மரியம்மனஹள்ளி பட்டண பஞ்சாயத்து, ராய்ச்சூர் மாவட்டத்தில் மஸ்கி புரசபை, கவிதாள், துருவிஹாள, பலகானூர், சிரவார் ஆகிய பட்டண பஞ்சாயத்துகள். யாதகிரி மாவட்டத்தில் கெம்பாவி புரசபை, கெக்கேரா புரசபை ஆகிய 58 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 15-ந் தேதி கடைசி நாள் ஆகும். 16-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 18-ந் தேதி கடைசி நாள் ஆகும். 30-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story