நெல்லை, தூத்துக்குடியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு


நெல்லை, தூத்துக்குடியில்  11 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 4:13 AM IST (Updated: 30 Nov 2021 4:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து உள்ளனர். 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 492 ஆக உள்ளது. நேற்று 7 பேர் உள்பட இதுவரை கொரோனாவில் இருந்து 56 ஆயிரத்து 41 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story