கும்மிடிப்பூண்டி அருகே கடையில் புகுந்து சிறுவனை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது


கும்மிடிப்பூண்டி அருகே கடையில் புகுந்து சிறுவனை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 3:11 PM IST (Updated: 2 Dec 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே கடையில் புகுந்து சிறுவனை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் இரும்பு கடை நடத்தி வருபவர் சாந்தாராம் (வயது 45). இவரது புதிய வீட்டை அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஜெகதீஷ் (47) என்பவர் கட்டி வருகிறார். கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடைக்குள் புகுந்து சாந்தாராமின் மகன் துல்சாராமை (17) ஜெகதீஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி ஜெகதீசை கைது செய்தனர்.

Next Story