கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்


கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில்  வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
x
தினத்தந்தி 30 Nov 2021 4:30 PM IST (Updated: 30 Nov 2021 4:30 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சன்னது புதுக்குடி கிராமத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கால்வாய் உடைப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பின. மற்ற குளங்களும் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக உப்பாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அனைத்து கண்மாய், குளங்களுக்கும் அதிக அளவில் தண்ணீர் சென்றது. 
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சன்னதுபுதுக்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் ஏற்கனவே நிரம்பிய நிலையில் மேலும் தண்ணீர் சென்றதால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, குளத்து தண்ணீர்  ஊருக்குள் சென்றது. இதனால் வீடுகளுக்குள் திடீரென தண்ணீர் வருவதை கண்ட கிராம மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் கிராம மக்கள் திரண்டு மணல் மூடைகளை கொண்டு கால்வாய் உடைப்பை அடைக்க முயற்சி செய்தனர்.
பயிர்கள் சேதம்
ஆனால் அதிக தண்ணீர் குளத்திலிருந்து வெளியேறுவதால், வீடுகள், தெருக்களில் தேங்கி வருகிறது. மேலும், கிராமத்து அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Next Story