ஸ்ரீவைகுண்டத்தில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்
ஸ்ரீவைகுண்டத்தில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் வடக்கு பண்டிதர் தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், காசிராஜன், லட்சுமண பெருமாள் (35), சக்திபாலன் (32) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இதில் காசிராஜனும், லட்சுமண பெருமாளும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சக்திபாலன் திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதனையடுத்து லட்சுமண பெருமாள் மதுபோதையில் அடிக்கடி தாயாரிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமண பெருமாள் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பெற்றோர் வெளியே சென்றிருந்தநிலையில், லட்சுமண பெருமாளும், சக்திபாலனும் சேர்ந்து வீட்டில் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் சக்திபாலனை லட்சுமண பெருமாள் கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த சக்திபாலன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாயார் லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து லட்சுமண பெருமாளை கைது செய்தார்.
Related Tags :
Next Story