தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து, பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 1,646 சுகாதார ஆய்வாளர்கள் அவுட் சோர்சிங் மூலம் நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஒப்பந்த ஊதியத்தில் பணியை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தன.
ஆர்ப்பாட்டம்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர்கள், நலக் கல்வியாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 100 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தை சேர்ந்த கே.சுடலை மணி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் செல்வதாஸ், தமிழ்நாடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கத்தை சேர்ந்த ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜோசப் சொர்ண பாண்டியன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தங்கவேலு, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் மதுரம் பிரைட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story