கும்பகோணத்தில், தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் பொதுமக்கள் சாலை மறியல் வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தல்


கும்பகோணத்தில், தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் பொதுமக்கள் சாலை மறியல் வடிகால்களை சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:14 PM IST (Updated: 30 Nov 2021 8:14 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தெருவில் கழிவுநீர் வழிந்ேதாடுவதை தடுக்க வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் தெருவில் கழிவுநீர் வழிந்ேதாடுவதை தடுக்க வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

கும்பகோணம் பெரும்பாண்டி பகுதியில் உள்ள ஆட்டோ நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள 5 தெருக்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்களை பதிப்பதற்காக சிமெண்டு சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டன. இந்த பணியின் போது ஆட்டோ நகரில் உள்ள 5 தெருக்களிலும் இருந்த சாலைகளும், கழிவுநீர் வடிகால்களும் முற்றிலும் சேதம் அடைந்தன. குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் சாலைகள் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. 

காய்ச்சல் பாதிப்பு

தற்போது பெய்துவரும் மழை காரணமாக வடிகால்கள் நிரம்பி தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. மேலும் இந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 
இந்த நிலையில் சாலை மற்றும் கழிவுநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும். புதிதாக கழிவறை கட்ட வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கும்பகோணம் - சென்னை சாலையில் ஆட்டோ நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story