காயத்துடன் சுற்றிய காட்டெருமையை தாக்கியவரால் பரபரப்பு
காயத்துடன் சுற்றிய காட்டெருமையை தாக்கியவரால் பரபரப்பு
ஊட்டி
நீலகிரி வன கோட்டத்தில் காட்டெருமைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்குள் காட்டெருமைகள் புகும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இதற்கிடையே ஊட்டி அருகே கேத்தி பகுதியில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று நடமாடி வருகிறது. இந்த நிலையில் கேத்தி-சேலாஸ் செல்லும் சாலையில் காயமடைந்த காட்டெருமை நின்று கொண்டிருந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற மர்மநபர் காட்டெருமையை தாக்கி உள்ளார். இதனால் காட்டெருமை திரும்பி சாலை வழியாக ஓடி வனப்பகுதிக்குள் சென்றது.
அங்கிருந்த மக்கள் அந்த நபரிடம் காட்டெருமையை தாக்கக் கூடாது, ஏற்கனவே காயத்துடன் சுற்றுத்திரிகிறது என்று தெரிவித்தும் நபர் காட்டெருமையை தாக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டெருமையை தாக்கிய நபர் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story