முதுமலை, மசினகுடியில் தொடர் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்


முதுமலை, மசினகுடியில் தொடர் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:56 PM IST (Updated: 30 Nov 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை, மசினகுடியில் தொடர் மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

கூடலூர்

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி, குன்னூர், மசினகுடி முதுமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து முதுமலை, மசினகுடி பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் தொடர் மழையால் மசினகுடி பகுதியில் உள்ள குளங்களிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவனமும் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர், ஊட்டி வன கோட்டங்கள் உள்ளது. இதுதவிர புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதிகள் உள்ளது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.

இந்த நிலையில் முதுமலை, மசினகுடி பகுதியில் தொடர் மழையால் அனைத்து தடுப்பணைகள், குளங்கள் நிரம்பியுள்ளது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை, பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story