தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.


தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு  செய்தார்.
x
தினத்தந்தி 30 Nov 2021 9:11 PM IST (Updated: 30 Nov 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்

தாராபுரம், 
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் வினீத் ஆய்வு  செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகள் 
தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அலுவலக பணிகள் குறித்து நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தொப்பம்பட்டி ஊராட்சி வரப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணிகள் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனைத்து பதிவேடுகள் அனைத்து கணக்கு ரொக்கப்புத்தகம் வரவு மற்றும் செலவு கணக்கு ஆய்வு செய்தார். கவுண்டச்சிபுதுதூர் ஊராட்சி சி.அம்மாபட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டிட பணிகள், அம்மாபட்டியில்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சின்னப்புத்தூர் 
சின்னப்புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிேவடுகள் அனைத்து வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ஊராட்சி பாஸ்புத்தகத்துடன் கணக்குகளை ஆய்வு செய்தார். ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், ஜீவானந்தம், உதவி பொறியாளர் ரஞ்சித் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Next Story