ஆத்தூர் தண்ணீர்பந்தல் தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது


ஆத்தூர் தண்ணீர்பந்தல் தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது
x
தினத்தந்தி 30 Nov 2021 9:23 PM IST (Updated: 30 Nov 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் தண்ணீர்பந்தல் தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கடம்பாகுளம் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுவதால் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆறுமுகநேரிக்கும், ஆத்தூருக்கும் இடையில் உள்ள தண்ணீர் பந்தல் தாம்போதி பாலத்தின் மேல் தண்ணீர் சென்றுகொண்டே இருக்கிறது. இதுவரை கடந்த ஒரு வாரமாக அந்த பாலத்தின் மீது அதிக அளவு தண்ணீர் சென்றுகொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக 2 தினங்கள் வாகன போக்குவரத்தை இந்த பாலத்தில் தடை செய்தனர். ஆனால் 3-வது நாள் மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த தாம்போதி பாலத்தில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகமானது. இதனால் மீண்டும் போக்குவரத்து தடை செய்யப்படுமோ? என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கவலை அடைந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் காவல் துறையின் கண்காணிப்பில் அந்த பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தடை செய்யப்படாமல் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வரிசையாக அனுப்பப்படுகிறது. இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

Next Story