தேங்காய் பருப்பு ஏலம்
தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.
இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
நேற்று 106 விவசாயிகள் கலந்து கொண்டு 44 ஆயிரத்து 945 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த14 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ 106.65-க்கும், குறைந்தபட்சம் ரூ 77.50-க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.40 லட்சத்து 71 ஆயிரத்து 157-க்கு வணிகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story