ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் மக்கள்


ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் மக்கள்
x
தினத்தந்தி 30 Nov 2021 9:42 PM IST (Updated: 30 Nov 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆபத்தை உணராமல் மக்கள் ஆற்றை கடந்து வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 7 மணி நேரம் பலத்த மழை கொட்டியது. வெளுத்து வாங்கிய மழையால் திரும்பி பாா்க்கும் திசை எல்லாம் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது.

 குறிப்பாக கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை வயல் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 

இதனால் ஆற்றின் மேற்கு கரைப்ப‌குதியில் வசிக்கிற 50-க்கும் மேற்ப்ப‌ட்ட குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் இந்த மலைக்கிராம மக்கள் ஆற்றை கடக்கின்றனர். 

ஆற்றின் இருபுறத்திலும் உள்ள மரங்களில் க‌யிற்றை கட்டி, அதனை பிடித்தப்படி தங்களது விளைபொருட்களை விவசாயிகள் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். 

எனவே மலைக்கிராம மக்களின் நலன் கருதி, பேத்துப்பாறை பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story