நாமக்கல்லில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2021 10:40 PM IST (Updated: 30 Nov 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.1-
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஓ.பி.சி. அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் வரவேற்றார். நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அமைப்புசாரா பிரிவு மாநில செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய அணியின் மாநில துணை தலைவர் சுரேந்திரரெட்டி கலந்து கொண்டு பேசினார்.
கோஷங்கள் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜனதாவினர் மாட்டு வண்டியை அருகில் நிறுத்தி இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துகுமார், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஹரிஹரன், வர்த்தக மாவட்ட தலைவர் நாகராஜன், நகர தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

Next Story