புதுக்கோட்டையில் வெயிலோடு பெய்த மழை
புதுக்கோட்டையில் வெயிலோடு பெய்த மழை பெய்தது.
புதுக்கோட்டை:
கடையக்குடி அணைக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் சற்று ஓய்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் வெயில் அடிக்க தொடங்கியது. இந்த வெயில் அடித்த போது மழையும் தூறியது.
தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் நிலவிய நிலையில் பகல் 1 மணி அளவில் சாரல் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. உபரிநீர் அதிக அளவில் திறந்துவிடப்படுகிறது. கடையக்குடி அணைக்கட்டில் மதகுகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதில் தண்ணீர் வெள்ளம் போல வெள்ளாற்றில் பாய்ந்தோடுகிறது. திருஉடையார்பட்டியில் தடுப்பணையை தாண்டி இருபுறமும் தண்ணீர் கரையை தொட்டப்படி செல்கிறது.
மழை அளவு விவரம்
மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 74 குளங்களில் 1,965 குளங்கள் முழுமையாக நிரம்பி உபரிநீர் பாய்ந்தோடுகிறது. மேலும் 1,938 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. தொடர் மழை பெய்தால் இந்த குளங்களும் நிரம்பிவிடும்.
மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-10, பெருங்களூர்-12, புதுக்கோட்டை-9.50, ஆலங்குடி-11, கறம்பக்குடி-2.60, மழையூர்-2.40, கீழணை-2.40, திருமயம்-7.80, அரிமளம்-3.20, ஆயிங்குடி-2.40, நாகுடி-1.40, மீமிசல்-4.80, ஆவுடையார்கோவில்-1.40, இலுப்பூர்-5, குடுமியான்மலை-24.40, அன்னவாசல்-4, விராலிமலை-7.10, உடையாளிப்பட்டி-3, கீரனூர்-2.40, பொன்னமராவதி-1.
Related Tags :
Next Story