நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பள்ளி ஊழியரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பள்ளி ஊழியரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
மோசடி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது34). இவர் அரிமளம் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் பேசி, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். மேலும் அதற்காக ரூ.95 ஆயிரத்து 349-ஐ மர்மநபர் ஆன்-லைனில் பெற்றிருக்கிறார். ஆனால் கடன் ஏற்பாடு செய்து கொடுக்காமல் மர்மநபர் மோசடி செய்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் அழகுராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story