தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி  பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:05 PM IST (Updated: 30 Nov 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை லட்சுமி நகர், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "இலுப்பூர் அருகே கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தி பணம் பெற்று வந்தார். அவரை நம்பி பெண்கள் ஏராளமானோர் பணம் செலுத்தி வந்தோம். ஆனால் சீட்டு முடிவடைந்த பின் தொகையை அவர் திருப்பி தரவில்லை. 
பலமுறை கேட்டும் தராமல் ஏமாற்றி விட்டார். லட்சக்கணக்கான ரூபாய் அவர் மோசடி செய்து விட்டார். அவர் வீட்டை காலி செய்துவிட்டு தற்போது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகார் மனு கொடுத்து உள்ளோம்" என்றனர்.

Next Story