கண்மாய் உடைந்து குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்
கண்மாய் உடைந்து குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலி ஊராட்சிக்கு உட்பட்ட கொசக்குடி கண்மாய்க்கு கடந்த வாரம் முதல் பெய்துவரும் வரும் தொடர் மழையால் பாப்பனக்கோட்டை, மேலூர், பணிக்கோட்டை ஆகிய கண்மாய்களின் தண்ணீர் வயல் வெளிகளில் விழுந்து வருவதால் கண்மாய் நிரம்பி வழிகிறது. கண்மாய் உடைந்தால் இந்த கண்மாயின் கரையோரத்தில் உள்ள மாரியாயிபட்டினம் குடியிருப்பு பகுதியில் நீர் சூழ்ந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கோரி ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் இந்த குடியிருப்பு பகுதியில் வாழும் பொதுமக்கள் புகார் செய்ததின் அடிப் படையில் தாசில்தார் முருகவேல் பார்வை யிட்டு கண்மாய்களில் மடைகளை திறந்துவிடுமாறு உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து கண்மாயின் மடையைத் திறந்து தண்ணீர் சனவேலி கோட்டக்கரை ஆற்றின் படுக் கையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஊரில் உள்ள சிலர் மடைகளை அடைத்ததால் மாரியாயிபட்டணம் குடியிருப்புப் பகுதி அருகே கண்மாய் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் நீர் சூழ்ந்து வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story