‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:49 PM IST (Updated: 30 Nov 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை வசதி வேண்டும்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கீழப்பாளையம் 2-வது வார்டில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாலை வசதியே கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால், மழை தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.
-பொதுமக்கள், கீழப்பாளையம்.

பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது பெய்த மழையால் பள்ளிக்கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்து விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.           
 -தேவசகாயம், மண்டலக்கோட்டை.

Next Story