கண்மாய்கள் நிரம்பி ஆற்றில் கலந்துவரும் மழைநீர்


கண்மாய்கள் நிரம்பி ஆற்றில் கலந்துவரும் மழைநீர்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:55 PM IST (Updated: 30 Nov 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு கண்மாய்கள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆற்றில் கலந்து வீணாகி வரும் வகையில் கடலுக்கு செல்கிறது.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு கண்மாய்கள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆற்றில் கலந்து வீணாகி வரும் வகையில் கடலுக்கு செல்கிறது.
நிரம்பிய கண்மாய்கள்
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, கல்லல், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு, பகலாக கனமழை பெய்து வருவதால் இங்குள்ள ஏராளமான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து ஆற்றில் கலந்து வருகிறது.
குறிப்பாக மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர் மழை காரணமாக அங்குள்ள உப்பாறு, வைகையாறு உள்ளிட்டவைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதேபோல் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் தொடர் மழை காரணமாக இங்குள்ள கண்மாய்கள் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அங்குள்ள மணிமுத்தாற்றில் கலந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலுக்கு செல்கிறது. 
வெள்ளப்பெருக்கு
இதுதவிர தற்போது காரைக்குடி அருகே கோவிலூர், பாதரக்குடி, செவரக்கோட்டை மணிமுத்தாறு அணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவிலூர் கண்மாய் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் கோவிலூர் கிராமத்தின் வழியாக பள்ளத்தில் பெருக்கெடுத்ததால் தண்ணீர் அருவிபோல கொட்டுகிறது. 

Next Story