வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி


வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி
x
தினத்தந்தி 1 Dec 2021 12:07 AM IST (Updated: 1 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்

மானாமதுரை, 
மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சோனைமுத்து (வயது75). இவர் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்கி கரையை கடக்க முயன்றார்.அப்போது மூதாட்டி வெள்ள நீரில் சிக்கினார். அங்கு  ஆற்றில் உள்ள செடிகளை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினரை மானாமதுரை பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story