6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 1 Dec 2021 12:30 AM IST (Updated: 1 Dec 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி, டிச.1-
திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்  இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மாநகர் கிரைம் ஸ்குவாடு இன்ஸ்பெக்டர் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் காவேரி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீராபாய், பாலக்கரை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் ஆகியோரை மத்திய மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி, கரூர் மாவட்டம் பாலவிடுதி இன்ஸ்பெக்டர் மோகன், திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் திருச்சி மாநகருக்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story