கொரோனாவுக்கு முதியவர் பலி
கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 104 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிறுவாச்சூரைச்சேர்ந்த 85 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 245 பேர் பலியாகி உள்ளனர். தற்போது மொத்தம் 11 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story